விவசாய பேரணியில் வெடித்த வன்முறை..! பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பகீர் வீடியோ

Published : Jan 26, 2021, 04:59 PM IST
விவசாய பேரணியில் வெடித்த வன்முறை..! பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பகீர் வீடியோ

சுருக்கம்

டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்து பரபரப்பான சூழல் உருவான நிலையில், வன்முறையாளர்கள் சிலர் பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர்.  

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், குடியரசு தினமான இன்று, டெல்லியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திவருகின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி டிக்ரி எல்லை மற்றும் சிங்கு எல்லையில் போலீஸார் அமைத்திருந்த தடைகளை உடைத்துக்கொண்டு டெல்லிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.

போலீஸார் அவர்களை தடுக்க, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விவசாயிகள் போலீஸாரின் வாகனங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விவசாயிகள் பேரணியில் வன்முறை வெடித்தது, குடியரசு தினத்தன்று பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வன்முறையில், போராட்டக்காரர்கள் சிலர் பெண் போலீஸை முற்றுகையிட்டு அவருக்கு பாதுகாக்க முயன்ற மற்றொரு போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!