மாறுவேடத்தில் சென்ற ஐயப்ப பக்தைகள் ரகசிய இடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்...

By Muthurama LingamFirst Published Jan 16, 2019, 4:58 PM IST
Highlights

’கடந்த நான்கு மாதங்களாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்திருக்கிறோம். எங்கள்  உயிரே போனாலும் பரவாயில்லை. அவரை தரிசிக்காமல் வீடு திரும்பமாட்டோம்’ என்றபடி சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கின்றனர் சபரிமலை பக்தைகள் இருவர்.
 

’கடந்த நான்கு மாதங்களாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்திருக்கிறோம். எங்கள்  உயிரே போனாலும் பரவாயில்லை. அவரை தரிசிக்காமல் வீடு திரும்பமாட்டோம்’ என்றபடி சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கின்றனர் சபரிமலை பக்தைகள் இருவர்.

கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த இளம் பெண்கள் ரேஷ்மா நிஷாந்த் , சனிலா சதீஷ். 30 வயதுடைய இருவரும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு பம்பையிலிருந்து சபரிமலை நோக்கி ஆண் வேடத்தில் நடந்து சென்றனர். நீலிமலை அருகே இரு பெண்களையும் அடையாளம் கண்டு போராட்டக்காரர்களும், ஆண் பக்தர்களும் தடுத்து நிறுத்தினர். பெண்களின் பாதுகாப்புக்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரித்ததுடன் 5 பேரை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து இரு பெண்களும் மலையேற முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் பெருமளவில் திரண்டு பாதையை மறித்து நின்றதால் பதற்றம் நிலவியது. 2 முதல் 3மணி நேர காத்திருப்புக்குப் பின் பெண்கள் இருவரையும் போலீசார் பம்பைக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்குப் பத்திரமாக திரும்ப அழைத்துச் சென்றனர். 

அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய இருவரும்,’’’கடந்த நான்கு மாதங்களாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்திருக்கிறோம். எங்கள்  உயிரே போனாலும் பரவாயில்லை. அவரை தரிசிக்காமல் வீடு திரும்பமாட்டோம். அவரை தரிசிப்பதிலிருந்து தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை’ என்றனர்.

பின்னர் அவர்கள் இருவரும் உடன் உதவிக்கு ஏழு ஆண்களுமாக மொத்தம் 9 பேர் ஐயப்ப தரிசனம் சாத்தியம் ஆகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக தாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை போலீஸார் தவிர மற்ற யாருக்கும் அறிவிப்பதாய் இல்லை என்றும் தெரிவித்தனர்.

click me!