டூவீலர் ஆம்புலன்ஸ்... ஏழைகளுக்காக வடிவமைத்த மோட்டார் மெக்கானிக்...

 
Published : Jun 15, 2017, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
டூவீலர் ஆம்புலன்ஸ்... ஏழைகளுக்காக வடிவமைத்த மோட்டார் மெக்கானிக்...

சுருக்கம்

Two wheeler ambulance for poor people manufactured by motor mechanic

வட இந்திய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதியில்லாமல் நோயாளிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் தோளிலும், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களிலும் எடுத்து செல்லும் அவல நிலை தொடர்ந்து நடந்து வருகின்றன.

அண்மையில் இறந்தபோன ஒருவரின் உடலை கணவன் மற்றும் மகன் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் டூவீலரில் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார் மோட்டார் மெக்கானிக் முகமது ஷாஜோர் கான் என்பவர்.

டூவீலர் ஆம்புலன்ஸ் குறித்து பேசிய முகமது ஷாஜோர், கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்த பெண் ஒருவரின் உடலை ஆமபுலன்ஸ் வசதியில்லாமல் அவரது கணவர் தோளில் சுமந்து சென்றதுதான் இதற்கு காரணம் என்று கூறினார்.

இவர் உருவாக்கியுள்ள ஆம்புலன்ஸ்-ல் ஸ்ட்ரெச்சர், முதலுதவி பெட்டி, ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்புலன்ஸை வடிவமைக்க 35 நாட்கள் செலவிட்டதாக கூறிய அவர், இதற்காக ரூ.1 லட்சத்து ஆயிரம் செலவானதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வடிவமைப்பு செலவை குறைப்பது குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் முகமது ஷாஜோர் கான் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!