
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,” நேற்று காலை நிலவரப்படி நாடு முழுதும் 195.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். 12 - 14 வயதினரில் 75 சதவீத பேர் முதல் தவணையும் 18 - 59 வயதினரில் 36.61 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியும் 15 - 18 வயதுடையோரில் 5.99 கோடி பேர் முதல் தவணை மட்டும் செலுத்தி உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… 500-ஐ கடந்தது ஒருநாள் தொற்று!!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,847 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மொத்தம் கொரோனா பாதிப்பினால் 63,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,847 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,70,577 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 13 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 12,847 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..