தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது...

 
Published : Mar 12, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது...

சுருக்கம்

two arrested in theatre

கடந்த  நவம்பர்  மாதம் 3௦ ஆம் தேதியன்று, அனைத்து  திரை அரங்குகளிலும் தேசிய கீதம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் , படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது .

இந்நிலையில், ஹைதரபாத்திலுள்ள கச்சிகுடா பகுதியில் உள்ள  ஐநாக்ஸ் தியேட்டரில் தேசிய கீதம் இயற்றப்பட்டது.அப்போது  இருவர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்துள்ளனர். இதனை  பார்த்த  ஒரு நபர், நாட்டு பற்றின் காரணமாக அருகில் உள்ள  காவல் நிலையத்தில்  புகார் தெரிவித்துள்ளார் .

இதனடிப்படையில், இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த செய்தி  மக்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு ஜாக்பாட்! டிட்வா புயல் நிவாரணமாக ரூ.3,700 கோடி நிதியுதவி.. இந்தியா அதிரடி அறிவிப்பு!
மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?