
பேஸ்புக்கில் அமெரிக்க அதிபருக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்கள் வருவது தொடர்பாக, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், மார்க் ஜூகர் பெர்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் தனக்கு எதிரானவர்கள் என்று டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜூகர் பெர்க் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் உதவுகிறேன் என்று பதிவிட்டார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பர் வெற்றி பெற்றார். இவர் இந்த தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப்தேர்தலில் வெற்றி பெற இந்த நிறுவனங்கள் உதவி புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதையடுத்து, பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்கள் அதிபர்தேர்தலில்ரஷியாவின் தலையீடு இ ருக்கிறதா என்பது குறித்து நிரூபிக்க வேண்டும். நவம்பர் 1-ந் தேதி நடக்கும் விசாரணையில் இந்த 3 நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என்றுசெனட் சபை உத்தரவிட்டது.
இதையடுத்து, அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பேஸ்புக் அதிபர் ஜூகர்பெர்க்கைகடுமையாகக் கண்டித்து பதிவிட்டு இருந்தார். அதில், “ பேஸ்புக் எப்போதும் டிரம்புக்குஎதிராகவே செயல்படுகிறது, எதிரான கருத்துக்களையே பரப்புகிறது. போலியான செய்திகளை பரப்புகிறது. டிரம்புக்கு எதிராக சதி செய்கிறது’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேஸ்புக் அதிபர் ஜூகர் பெர்க் தனது பேஸ்புக்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது-
பேஸ்புக் என்ற சமூக ஊடகம் எப்போதும் தனக்கு எதிராக இருப்பதாக டிரம்ப்குற்றம்சாட்டுகிறார். அவருக்கு பதில் அளிக்க வேண்டும். பேஸ்புக் தளத்தில் வரும் ஒவ்வொருவரையும் இணைக்கும் முயற்சியிலும், கூட்டாக இணைந்த சமூகத்தை உருவாக்கும் முயற்சியிலும் நாள்தோறும் நாங்கள் ஈடுபடுகிறோம். அனைவரின் கருத்துக்களையும், குரல்களையும் சம அளவு முக்கியத்துவம் அளித்து, எண்ணங்களையும், கருத்துக்களையும் தெரிவிக்க தளத்தை உருவாக்குகிறோம்.
பேஸ்புக் தனக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்தான் மக்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதில் இணையதளம் முக்கியப் பங்காற்றியது. அமெரிக்காவின் ஒவ்வொரு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பேஸ்புக்கின் பங்கின் முக்கியமானது.
உலகில் எந்த நாட்டில் தேர்தல் நடந்தாலும் நியாயமாக , நேர்மையாக நடக்கவும்,ஜனநாயகம் காப்பற்றப்படவும் நாங்கள் பாடுபடுகிறோம்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதே சூழல் விரைவில் இந்தியாவிலும் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது, வேலைவாய்ப்பு முடங்கி உள்ளது. தொழில்துறை உற்பத்தியும் சுருங்கிவிட்டது. ரூபாய் நோட்டு தடையும், ஜி.எஸ்.டி. வரியும் மக்களை மிகக்கடுமையாக பாதித்துள்ளன. இதனால், நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மோடிக்கு எதிரான எதிர்ப்பலை உருவாகி வருகிறது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஆளும் கட்சி பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்கும் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் பா.ஜனதா கட்சி இப்போதே அலறத்தொடங்கிவிட்டது. சமீபத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங், தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர், மக்கள் சமூக ஊடங்களில் வரும் கருத்துக்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று புலம்பத் தொடங்கிவிட்டனர். இதை சூழல் நீடித்தால், டிரம்ப் இப்போது அலறுவதுபோல், மோடியும் பேஸ்புக்கை கண்டு மிரளப்போவது நடந்தாலும் வியப்பில்லை.