உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் டிரக் டிரைவர் காரை இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச, மீரட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் காரை இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து எஸ்.பி பியூஷ் குமார் கூறுகையில், காலை 9 மணியளவில் ஷாப்லெக்ஸ் மால் அருகே உள்ள மீரட்டில் இருந்து பிரதாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு ஓட்டுநர் போதையில் கன்டெய்னரை ஓட்டிக்கொண்டு காரை இழுத்துச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!
லாரியை நிறுத்தாமல், டிரைவர் காரை சிறிது நேரம் இழுத்துச் செல்லப்பட்டது. காரை இழுத்துச் செல்லும் போது வாகனத்தில் யாரும் இல்லை என்றும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.
| A horrific incident has come to light where a drunk truck driver dragged a car for 3 kilometers, and 4 people who were inside the car had to jump out. WATCH the video of the incident: pic.twitter.com/lLZaMa1TGL
— News18 (@CNNnews18)வாகனத்தை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாகவும், நான்கு சக்கர வாகனத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிய பிறகும் வாகனத்தை நிறுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்களுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?