மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Feb 13, 2023, 7:51 PM IST

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் மின்சார மானியம் பெறுபவர்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வந்ததுடன் மக்களுக்கு ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்துங்கள்; சொந்த மண்ணில் கதறும் தமிழக தொழிலாளர்கள்

Tap to resize

Latest Videos

மேலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட கணவனை மீட்டுத்தக்கோரி மனைவி, பிள்ளைகள் தீக்குளிக்க முயற்சி

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது என்று தெரிவித்ததோடு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

click me!