பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. ஆளைக் கொல்லும் ஆளில்லா லெவெலிங் கிராசை கடக்க முயன்றபோது பரிதாபம்…13 குழந்தைகள் பலி….

 
Published : Apr 26, 2018, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. ஆளைக் கொல்லும் ஆளில்லா லெவெலிங் கிராசை கடக்க முயன்றபோது பரிதாபம்…13 குழந்தைகள் பலி….

சுருக்கம்

Train hit School van in UP and 13 children killed

உத்தரபிரதேசத்தில் ஆளில்லா லெவலிங் கிராசை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 13 குழந்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று காலை  பள்ளிக்கு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்,

குஷி நகரின் புற நகர் பகுதியை தாண்டும்போது  ஆளில்லா ரயில்வே கிராசிங்கை  அந்னத பேருந்து கடக்க முயன்றது. அப்போது அங்கு  அசுர வேகத்தில் வந்த ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது,

இந்த கோர விபத்தில் 13 மாணவர்கள்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள  உ.பி. முதமைச்சர்  யோகி ஆதித்யநாத் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!