ரயில் கட்டணம் அதிரடி உயர்வு !! எப்போ இருந்து தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Nov 27, 2019, 10:35 PM IST
Highlights

மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு பிரதமரிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் ரெயில்வேயில் சரக்கு போக்குவரத்திலும், பயணிகள் போக்குவரத்திலும் தொடர்ந்து வருவாய் இழப்புகள் ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி சரக்கு கட்டணம் வருமானத்தில் ரூ.3,901 கோடியும், பயணிகள் கட்டண வருவாயில் ரூ.155 கோடியும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து பயணிகள் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில், “பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் ராஜ்தானி, சதாப்தி, தூராந்தோ ரெயில்களில் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு காலை உணவு கட்டணம் ரூ.140, மதியம் மற்றும் இரவு உணவு கட்டணம் ரூ.245 ஆக உயர்த்தப்பட்டது. 

அதுபோல 2-வது வகுப்பு பயணிகளுக்கு காலை உணவு கட்டணமாக ரூ.105, மதிய, இரவு உணவு கட்டணமாக ரூ.185 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு கட்டணம் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மோடி ஒப்புதல் வழங்கியதும் விரைவில் கட்டண உயர்வு விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

click me!