பாஜக வீழ்த்தி மகாராஷ்டிராவில் மகுடம் சூடும் சிவசேனா.. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த உத்தவ் தாக்கரே..!

By vinoth kumarFirst Published Nov 27, 2019, 6:23 PM IST
Highlights

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் மாநில முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்நாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று காலை அதிரடி உத்தரவு பறிப்பித்தது. இதையடுத்து, பெருபான்மை இல்லாததால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர், உத்தவ் தாக்கரேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். ஆதரவு எம்எல்ஏ-க்களின் பட்டியலை 7 நாட்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், பதவியேற்பு விழா, சிவசேனா ஆண்டுதோறும் தசரா விழாவை நடத்தும் சிவாஜி பூங்கா மைதானத்தில், நாளை மாலை 6-40 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் மாநில முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். 

click me!