அடேங்கப்பா ... நம்பர் 1 ...! ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்ட "படேல் சிலை" எப்படி இருக்குனு பாருங்க..!

By thenmozhi gFirst Published Nov 17, 2018, 1:18 PM IST
Highlights

இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரிய சிலை வைத்து உள்ளது இந்தியா.

இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரிய சிலை வைத்து உள்ளது இந்தியா.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். இவர் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் என்பதால், இவருடைய சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிலையின் உயரம் 182 மீட்டர். அதாவது 597 அடி. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது படேலின் சிலை என்பது  பெருமைக்கொள்ள வேண்டிய விஷயம்.

உலகிலேயே மிக உயரமான சிலையான படேலின் சிலையை காண உலக மக்கள் பெரும்பாலோனோர் பெரும் ஆவல் கொண்டு உள்ளனர். மேலும் இந்த இடம் மாபெரும் சுற்றுலா தளமாக மாற உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆளும் மோடி அரசின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக, படேலின் சிலையை ஆகாயத்தில் இருந்து மிக அழகாக படம் எடுத்துள்ளது ஒரு அமெரிக்க நிறுவனம் ஸ்கை லேப். இந்த புகைப்படம் மக்கள் மத்தியில் ஹாட் ஆப் தி டாக்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!