பட்டியலில் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நிறுவனத்தின் 10 கார்கள் இடம்பிடித்துள்ளன. ஏப்ரல் 2024 இல் டாடா பஞ்ச் அதிகம் விற்பனையான காராக இருந்த நிலையில், மே மாதம் அதனை மாருதி ஸ்விஃப்ட் முந்தியிருக்கிறது.
இந்தியா உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் ஒன்றாகும். மாருதி சுஸுகி முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. மே 2024 நிலவரப்படி, அதிகம் விற்பனையான 25 சிறந்த கார்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நிறுவனத்தின் 10 கார்கள் இடம்பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் மஹிந்திராவின் தலா 4 கார்கள் உள்ளன. டாடா மற்றும் கியாவிலிருந்து தலா 3 கார்களும் டொயோட்டாவிலிருந்து 1 காரும் விற்பனையில் சிறப்பாக உள்ளன.
அதிகம் விற்பனையாகும் டாப் 25 கார்கள் (மே 2024):
1 மாருதி ஸ்விஃப்ட்- 19,393 யூனிட்கள், 12% ஆண்டு வளர்ச்சி
2 டாடா பஞ்ச்- 18,949 யூனிட்கள், 70% ஆண்டு வளர்ச்சி
3 மாருதி டிசையர்- 16,061 யூனிட்கள், 42% ஆண்டு வளர்ச்சி
4 Hyundai Creta- 14,662 அலகுகள், 1% ஆண்டு வளர்ச்சி
5 மாருதி வேகன் R- 14,492 யூனிட்கள், -11% ஆண்டு வளர்ச்சி
6 மாருதி பிரெஸ்ஸா- 14,186 யூனிட்கள், 6% ஆண்டு வளர்ச்சி
7 மாருதி எர்டிகா- 13,893 யூனிட்கள், 32% ஆண்டு வளர்ச்சி
8 மஹிந்திரா ஸ்கார்பியோ N + கிளாசிக்- 13,717 யூனிட்கள், 47% ஆண்டு வளர்ச்சி
9 மாருதி பலேனோ- 12,842 யூனிட்கள், -31% ஆண்டு வளர்ச்சி
10 மாருதி ஃப்ரான்க்ஸ்- 12,681 யூனிட்கள், 29% ஆண்டு வளர்ச்சி
11 டாடா நெக்சான் - 11,457 அலகுகள், -21% ஆண்டு வளர்ச்சி
12 மாருதி ஈகோ- 10,960 யூனிட்கள், -14% ஆண்டு வளர்ச்சி
13 மஹிந்திரா XUV 3XO - 10,000 யூனிட்கள், 95% ஆண்டு வளர்ச்சி
14 மாருதி கிராண்ட் விட்டாரா- 9,736 யூனிட்கள், 10% ஆண்டு வளர்ச்சி
15 ஹூண்டாய் வென்யூ- 9,327 அலகுகள், - 9% ஆண்டு வளர்ச்சி
16 டொயோட்டா இன்னோவா கிஸ்டா+ ஹைகிராஸ் - 8,548 அலகுகள், 10% ஆண்டு வளர்ச்சி
17 மஹிந்திரா பொலேரோ- 8,026 யூனிட்கள், -2% ஆண்டு வளர்ச்சி
18 ஹூண்டாய் எக்ஸ்டர்- 7,697 யூனிட்கள்
19 மாருதி ஆல்டோ- 7,675 யூனிட்கள், -18% ஆண்டு வளர்ச்சி
20 கியா சானெட் - 7,433 அலகுகள், -10% ஆண்டு வளர்ச்சி
21 கியா செல்டோஸ்- 6,736 அலகுகள், 66% ஆண்டு வளர்ச்சி
22 டாடா டியாகோ - 5,927 அலகுகள், -27% ஆண்டு வளர்ச்சி
23 மஹிந்திரா தார்- 5,750 யூனிட்கள், 34% ஆண்டு வளர்ச்சி
24 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 - 5,328 அலகுகள், -17% ஆண்டு வளர்ச்சி
25 கியா கேரன்ஸ்- 5,316 அலகுகள், -17% ஆண்டு வளர்ச்சி
மே 2024 இல் 19,393 யூனிட்கள் விற்பனையான மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்திலும், 18,949 யூனிட்கள் விற்பனையான டாடா பன்ச் இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஏப்ரல் 2024 இல் டாடா பஞ்ச் அதிகம் விற்பனையான காராக இருந்த நிலையில், மே மாதம் அதனை மாருதி ஸ்விஃப்ட் முந்தியிருக்கிறது.
அடேங்கப்பா! ஒரு படத்துக்கே இவ்ளோவா! கங்கனா ரனாவத், ஆலியா பட்டை முந்திய தீபிகா படுகோன்!