டாப் 10 தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில் 6 இடங்களை கைப்பற்றிய ராஜஸ்தான்! கோட்டை விட்ட தமிழகம்

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 8:18 AM IST
Highlights

தூய்மையான ரயில் நிலையங்களுக்கான டாப் 10  பட்டியலில் ஜெய்ப்பூர் உள்பட ராஜஸ்தானின் 6 ரயில் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் தமிழகத்திலிருந்து ஒரு ரயில் நிலையம் கூட இடம் பெறவில்லை.
 

கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை தூய்மையாக வைத்திருப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் பயணிகளுக்கு சுகாதாரமான ரயில் சேவை கிடைத்து வருகிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சுத்தமான ரயில் நிலையங்கள் தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. 

தூய்மையான டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் அதிகபட்சமாக ஒரே  மாநிலத்தை சேர்ந்த 6 நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தின் 6 ரயில் நிலையங்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அம்மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள  ஜெய்ப்பூர் ( முதல் இடம்), துர்காபூர் மற்றும் காந்திநகர் ஆகிய ரயில் நிலையங்கள் டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேலும் ராஜஸ்தானின் ஜோத்பூர் (2வது இடம்) மற்றும் உதய்பூர் (8வது இடம்) மற்றும் அஜ்மீர் (9வது இடம்) ஆகிய ரயில் நிலையங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

டாப் 10 சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் ஜம்மு தாவி, சூரர்கர், விஜயவாடா மற்றும் ஹரித்வார் ஆகிய 4 நிலையங்களும் இடம் பிடித்துள்ளன. இந்த டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்திலிருந்து ஒரு ரயில் நிலையம் கூட இடம் பிடிக்கவில்லை. 

புறநகர் ரயில் நிலையங்கள் பிரிவில் மும்பையின் அந்தேரி மற்றும் விரார் மற்றும் நாயகன் ஆகிய ரயில் நிலையங்கள் சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் தூய்மையான ரயில் மண்டலங்கள் பட்டியலில் முதல் இடத்தை வட மேற்கு ரயில்வே தட்டி சென்றது. அதற்கு அடுத்து தென் கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்கள் உள்ளன.

click me!