திருப்பதி டிக்கெட்டில் முஸ்லீம் மத விளம்பரம்... சர்ச்சையில் சிக்கிய ஜெகன் மோகன் ரெட்டி..!

By Thiraviaraj RMFirst Published Aug 23, 2019, 5:52 PM IST
Highlights

திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் ஆந்திர அரசு பேருந்தில், பயணம் செய்பவர்களுக்குக் கொடுக்கும் பேருந்து டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு தகவலால் சர்ச்சை வெடித்துள்ளது.
 

திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் ஆந்திர அரசு பேருந்தில், பயணம் செய்பவர்களுக்குக் கொடுக்கும் பேருந்து டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு தகவலால் சர்ச்சை வெடித்துள்ளது.

பயணச்சீட்டின் பின்புறம் ஹஜ் மற்றும் ஜெருசலம் யாத்திரைகளுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இதை கவனித்த பேருந்தில் பயணம் செய்த சிலர், அந்தப் பகுதியின் மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். அவரோ, இந்துக்கள் யாத்திரை குறித்து இல்லாத விளம்பரங்கள் சில டிக்கெட் கட்டுகளில் பதிவிடப்பட்டு, அது தவறாக திருப்பதிக்கு வந்துள்ளது என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

ஆந்திர பிரதேச சாலைப் போக்குவரத்துக் கார்ப்பரேஷன், இயக்குநரின் கவனத்துக்கும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். அவர், “சிறுபான்மையினர் துறை மூலம் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள், ‘ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்துக்களுக்கு எதிரானவர். அவருக்கு மத நம்பிக்கைக் கிடையாது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே இதை அவர் வேண்டுமென்று செய்திருக்கிறார்' எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக அமெரிக்கா சென்ற ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் வேண்டுமென்றே குத்து விளக்கு ஒன்றில் தீபமேற்ற மறுத்துவிட்டதாக சர்ச்சை கிளம்பியது. இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள், “முதல்வர் ஜெகன் மோகன், இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. முதல்வர் கலந்துகொண்ட அமெரிக்க நிகழ்ச்சியில் எண்ணை ஊற்றி ஏற்றும் விளக்கு இல்லை. மின்சார விலக்குதான் இருந்தது. அதுதான் இப்படி மாற்றி சொல்லப்பட்டிருக்கிறது” என்று விளக்கம் கொடுத்துள்ளனர். 

click me!