நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி தூக்கு...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By ezhil mozhiFirst Published Jan 7, 2020, 5:10 PM IST
Highlights

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனையை வழங்க வேண்டுமென நிர்பயாவின் தாய் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது
 

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி தூக்கு...!  நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 22 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனையை வழங்க வேண்டுமென நிர்பயாவின் தாய் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது

2012-ல் நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். பின்னர் குற்றவாளிகள் 4  பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த கருணை மனுவும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தூக்கிலிடும் பணி செய்யும் இரண்டு ஹேங்மேன்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது. 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு பலன் அளிக்காமல் 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

டெல்லி போலீஸார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.பின்னர்  வெவ்வேறு சிறையில் இருந்த 4 பேரும் சமீபத்தில் திஹார் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 22 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது

click me!