
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ராணுவ வாகனம் காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே வந்துக்கொண்டிருந்த திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்
இந்த விபத்து தொடர்பாக ராணுவம், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்டு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் நீண்ட போராட்டத்திற்க பிறகு விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
விபத்தில் பலியானவர்கள் அமித் குமார், சுஜித் குமார் மற்றும் மன் பகதூர் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்தில் வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் விழுந்ததில் முற்றிலும் அப்பளம் போல் உருக்குலைந்து காணப்படுகிறது.