மேற்குவங்க மாநிலத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேற்கு வங்க மாநிலம் பக்சா புலிகள் காப்பக வனப்பகுதியில் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 3 யானைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் ராஜபத்காவா மற்றும் கல்சினி ரயில் நிலையங்களுக்கு இடையே ஷிகாரி கேட் அருகே காலை 7 மணியளவில் நடந்தது. இந்த விபத்தில் ஒரு குட்டி மற்றும் இரண்டு யானைகள் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தன.
அம்மாநிலத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தின் மேற்கு ராஜாபத்காவா மலைத்தொடரில் நடந்த சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளில், மூன்று யானைகளில் ஒன்று ரயிலுக்கு அடியில் அதன் உடலில் பல வெட்டுக் காயங்களுடன் சிக்கியிருப்பதை காண முடிகிறது.
சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்: மத்திய அரசு தீவிர நடவடிக்கை!
இந்தியாவில் ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள சப்ரமாரி காப்புக்காடுக்குள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி யானை மீது சரக்கு ரயிலில் மோதியது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 20 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் யானை மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ளன. இருப்பினும், இயற்கைக்கு மாறான யானைகள் இறப்பிற்கு அம்மாநில ரயில் விபத்துகள் ஒரு காரணமாக உள்ளதாக சுட்டிக்காடப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அம்மாநில அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.