பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்! 3 பக்தர்கள் பலி! பலர் காயம்!

Published : Jun 29, 2025, 10:52 AM IST
Puri Rath Yatra tragedy

சுருக்கம்

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

3 Killed In Stampede During Puri Jagannath Temple Rath Yatra: ஒடிசா மாநிலம் பூரியில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று முன்தினம் தொடங்கியது. ஜூலை 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலி

பூரியில் உள்ள கண்டிச்சா கோயிலுக்கு அருகிலுள்ள சாரதாபலி அருகே ரத யாத்திரை நடந்தபோது தேர்தல்களில் உள்ள தெயவங்களை தரிசிக்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் அங்கு ஒரே இடத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறி 3 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் பிரேமகந்தா மொஹந்தி (80), பசந்தி சாஹூ (36), மற்றும் பிரபாதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே 500 பக்தர்கள் காயம்

மேலும் பலர் காமமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நடந்துள்ளது. நேற்று முன்தினம் பாலபத்ரரின் தேரை இழுக்க ஏராளமான பக்தர்கள் திரண்டதால், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இழுக்கப்படும் மூன்று பிரமாண்ட தேர்களில் ஒன்றான தலத்வஜா தேரை சடங்கு ரீதியாக இழுக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

8 பேர் ஆபத்தான நிலை

தலத்வஜா தேரின் புனித கயிறுகளைப் பிடிக்க ஆர்வமுள்ள பக்தர்கள் விரைந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது, இதன் விளைவாக 500க்கும் மேற்ப்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் சிறு காயங்களுக்கு ஆளானாலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், குறைந்தது எட்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

பாஜகவுக்கு நெருக்கடி

பூரியில் பெருந்திரளான கூட்டத்தை நிர்வகிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) எட்டு நிறுவனங்களும் பாதுகாப்பு கொடுக்கின்றன. ஆனாலும் பூரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பது ஆளும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிந்தும் சரியான திட்டமிடலை பாஜக அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பாஜக அரசின் தவறால் அப்பாவி பக்தர்கள் உயிரிழக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?