ஓயாமல் நள்ளிரவில் வீடியோ கால்! மாணவியின் ஆடை கழற்ற சொல்லி டார்ச்சர் செய்த பேராசிரியர்!

Published : May 25, 2025, 03:13 PM IST
bengaluru metro

சுருக்கம்

வீடியோ காலில் ஆடை கழற்ற சொல்லி மிரட்டிய பேராசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மீது கல்லூரி மாணவி புகார்

வீடியோ காலில் கல்லூரி மாணவியின் ஆடையை கழற்றச் சொல்லி மிரட்டியது மட்டுமல்லாமல் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என கூறிய அரசு கல்லூரிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 24 வயது மாணவி இளங்கலை அறிவியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியில் பேராசிரியராக பயணியாற்றி வந்த துஷ்யந்த் குமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மாணவிக்கு நள்ளிரவில் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டும், ஆபாச செய்திகள் அனுப்பியும் பேராசிரியர் பல மாதங்களாகத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஆடை கழற்ற சொல்லி டார்ச்சர்

அதுமட்டுமல்லாமல் நள்ளிரவில் வீடியோ அழைப்பு செய்து ஆடை கழற்றும்படி பேராசிரியர் கூறியுள்ளார். அதற்கு மறுத்ததால் செய்முறைத் தேர்வில் தோல்வியடையச் செய்வேன் என்றும், தேர்வு முடிவுகளைத் தாமதப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார். எதற்கும் உடன்படாத மாணவி இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியர் மீது சிவில் லைன் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக் குழு அமைப்பு

பேராசிரியரின் மோசமான நடத்தைக்கு ஆதாரமாகத் தன்னிடம் குரல் பதிவுகள் இருப்பதாகவும் மாணவி தெரிவித்தார். மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்டு உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். மாணவிக்கு பேராசிரியல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருப்பி அடிக்கும் பாஜக..! செம்ம அடி வாங்கிய கம்யூனிஸ்டுகள்.. கேரளாவில் ஆங்காங்கே பரபரப்பு
2026 விடுமுறை லிஸ்ட் ரெடி! 2026-ல் எந்த நாள் விடுமுறை? முழு பட்டியல் இதோ!