திருவாரூர் தேர்தலுக்கு ஆப்பு...! மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..!!

By vinoth kumarFirst Published Jan 4, 2019, 11:46 AM IST
Highlights

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான வழக்கை விரைவில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் டி.ராஜா, மாரிமுத்து மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான வழக்கை விரைவில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் டி.ராஜா, மாரிமுத்து மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து ஜனவரி 28-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் அறிவிக்கப்படாமல் திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இடைத்தேர்தலின் போது முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் டி.ராஜாவின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு அதிமுக, திமுக மற்றும் அமமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இன்று அறிவிக்க உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றக்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக நேற்று முன்தினம் பிரசாத் என்ற வழக்கறிஞர் திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இடைத்தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!