இந்தியாவில் விமானிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தகவல்!

By Manikanda Prabu  |  First Published Dec 20, 2023, 5:25 PM IST

இந்தியாவில் விமானிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், விமானிகள் தட்டுப்பாடு, வணிக பைலட் உரிமங்கள் குறித்த கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் கூறியிருப்பதாவது: “நாட்டில் விமானிகளுக்குப் பஞ்சமில்லை. இருப்பினும், சில வகையான விமானங்களில் கமாண்டர்களின் பற்றாக்குறை உள்ளது, இது வெளிநாட்டு விமானிகளை வெளிநாட்டு விமானப் பணியாளர் தற்காலிக அங்கீகாரம் (எஃப்ஏடிஏ) மூலம் பயன்படுத்துவதன்  வாயிலாக நிவர்த்தி செய்யப்படுகிறது.

Latest Videos

undefined

ஏர் இந்தியா லிமிடெட், இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் புதிய விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான வணிக விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க நாடு முழுவதும் அதிக விமானம் ஓட்டும் பயிற்சிப் பள்ளிகளை நிறுவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றம்; பாஜகவின் சர்வாதிகார சிந்தனை - திருச்சி சிவா தாக்கு!

2021 ஆம் ஆண்டிலிருந்து, ஒரு போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, ஏஏஐ 10 விமான நிலையங்களில் 15 எஃப்.டி.ஓ இடங்களை வழங்கியுள்ளது, அவற்றில் 5 செயல்படுகின்றன. இந்த எஃப்.டி.ஓக்களில், கஜுரஹோவில் ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அமேதியில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமி (ஐ.ஜி.ஆர்.யு.ஏ) அதன் பறக்கும் நேரம் மற்றும் விமான பயன்பாட்டை அதிகரிக்க கோண்டியா (மகாராஷ்டிரா) மற்றும் கலபுரகி (கர்நாடகா) ஆகிய இடங்களில் பைலட் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் 34 பறக்கும் பயிற்சி நிறுவனங்கள் (எஃப்.டி.ஓ) 55 தளங்களில் செயல்பட்டு வருகின்றன, அவை கேடட்களுக்கு பறக்கும் பயிற்சியை வழங்குகின்றன. நடப்பு 2023 ஆம் ஆண்டில் (நவம்பர் வரை) இதுவரை மொத்தம் 1491 வணிக பைலட் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.” இவ்வாறு அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!