மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் ஆபத்து என நிர்மலா சீதாரமனின் கணவர் பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் 2024க்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளிட்ட சில மாநிலங்களில் முதற்கட்ட நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் ஆபத்து என நிர்மலா சீதாரமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் தற்போதைய அரசியல் தொடர்பான கருதரங்கிற்கு சென்னை சிந்தனையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. "The values at stake" என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையார் இந்து என்.ராம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகல பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய பரகல பிரபாகர், “உலகின் மிகப்பெரிய கட்சி என கூறப்படும் பாஜகவில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய வரைபடமே மாறிவிடும்.” என எச்சரிக்கை விடுத்தார்.
மீண்டும் தாமரை.. மோடி தான் அடுத்த பிரதமர்.. ராகுல் காந்தி செய்த விதிமீறல்.. அடித்து ஆடும் அண்ணாமலை..
மேலும், சமத்துவமின்மை, இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம், பல்வேறு பொருட்களின் பணவீக்கம் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவை நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளதாக அரசியல் பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில், குறிப்பாக 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே கடுமையான வேலையின்மைப் பிரச்சனை உள்ளது. அவர்களிடையே வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 60-65 சதவீதம் வேலையில்லாதவர்கள் படித்தவர்கள்.” என்றார்.