
காதலி தன்னைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காக, காதலியை மிரட்டும் வகையில் துப்பாக்கி கொண்டு மிரட்ட எண்ணிய இளைஞர் ஒருவர், தலையில் குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (19). இவர் தனது காதலியோடு வாட்ஸ் ஆப்பில் வீடியோ சாட்டிங்கில் பேசியுள்ளார். காதலி தன்னை விட்டு போய்விடக் கூடாது என்ற நோக்கில் காதலிடன் பேசி வந்துள்ளார்.
அப்போது ஆகாஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். காதலி தன்னைவிட்டு போய்விடக் கூடாது என்ற எண்ணம் ஆகாஷை ஆக்கிரமித்திருந்தது.
அவர்கள் தொடர்ந்து பேசிய நிலையில் ஆகாஷ் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காதலியை மிரட்டுவதற்காக, துப்பாக்கி கொண்டு மிரட்டியுள்ளார். அப்போது அந்த இளம்பெண் துப்பாக்கியை கீழே போடும்படி கூறியுள்ளார்.
தான் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை அகற்றிவிட்டு தனது நெற்றியில் வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார் ஆகாஷ்.
ஆனால், துப்பாக்கியில் தோட்டா ஒன்று இருந்துள்ளதை ஆகாஷ் கவனிக்கவில்லை. காதலியை மிரட்டி பணிய வைப்பதற்காக விசையை அழுத்தியதும் துப்பாக்கியில் இருந்த தோட்டா பாய்ந்து ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த ஆகாஷின் பெற்றோர், மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். பின்னர், ஆகாஷ் இறப்பு குறித்து அறிந்த அவர்கள், அந்த பெண்ணின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசாரும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர் தேர்வில் தோல்வியடைந்ததால் அவரது குடும்பத்தினர் காதலை கைவிடும் படி கூறியதாக தெரிகிறது. ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எதிர்பாராமல் நடந்த தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.