ஹேர் ஸ்டைல் பன்னுவதாக கூறி தலை முடியை எரித்து விட்டனர்... சலூன் கடை ஊழியர் மீது ராணுவ அதிகாரியின் மனைவி புகார்

By Ajmal KhanFirst Published May 13, 2022, 8:54 AM IST
Highlights

ஹேர் ஸ்டைல் செய்வதாக கூறி தலைமுடியை அழகு நிலைய  ஊழியர்கள் எரித்து விட்டதாக ராணுவ வீரரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Fire கட்டிங்கால் பாதிப்படைந்த பெண்

தலை முடி தீயில் கருகினால் வீட்டிற்கு ஆகாது என பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் தலைமுடியை அழகு படுத்துவதற்காக தலையில் தீவைப்பது தற்போது புதிய ஸ்டைலாக மாறிவிட்டது.  Fire கட்டிங் என்படும் புதிய ஹேர் ஸ்டைல் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் படு வேகமாக பரவி வருகிறது. இதில் தலை முடியில் தீயின் மூலம் எரிப்பதால் புதுவையான ஸ்டைல் உருவாகுவதாக கூறி வருகின்றனர். இந்தநிலையில் ஹேர் ஸ்டைல் செய்வதாக கூறி தனது தலை முடியை தீவைத்து எரித்து விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் உள்ள பிரபலமான சலூன் கடைக்கு ராணுவ வீரரின் மனைவி சென்றுள்ளார். அப்போது  தலை முடியில் ரசாயன சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

சலூன் ஊழியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்

இதனை தொடர்ந்து தலை முடியை அழகு படுத்துவதற்காக சலூன் ஊழியர்கள்  பையர் கட்டிங் செய்துள்ளனர். அப்போது தலைமுடி அலங்கோலமாக சேதமடைந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண்மனி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது சலூன் கடையில் சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து இந்தூரில் உள்ள விஜய் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சலூன் கடை பொறுப்பாளர் ஷூபம் குப்தா, மேலாளர் பாவனா மற்றும் ஊழியர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இருந்த போதும் போலீசார் இந்த புகார் தொடர்பாக யாரை யும் கைது செய்யவில்லை. தலைமுடி ஸ்டைல் செய்வதற்காக சென்ற பெண் ஒருவர் பயர் கட்டிங் மூலம் தலைமுடியை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!