சிவகார்த்திகேயன்சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன்.மெரினா படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி படமாக அமைந்த படம் வேலைக்காரன்.மோகன் ராஜா இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார்.50 நாட்கள்மார்க்கெட்டிங் துறையில் நடக்கும் உண்மைகளை கிழித்தெறிந்து வெளிப்படுத்தியிருப்பார் மோகன் ராஜா. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படம் நேற்றுடன் 50 நாள்களை கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர் சந்தோஷமாக இதை பகிர்ந்து வருகின்றனர். தமிழகம்தற்போது இப்படம் உலகம் முழுவதும் கடந்து இந்த 50 நாட்களில் 86கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் பார்த்தால் 58கோடி ரூபாய் வசூலாம். வெளி மாநிலங்கள்கர்நாடகாவில் 4 கோடி ரூபாயும், கேரளாவில் 1.5 கோடியும் மற்ற மாநிலங்களில் 70 லட்சம் ரூபாயும் வசூல்செய்துள்ளது.வெளிநாடுவெளிநாடுகளில் இப்படம் 22கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் ஹிட்இதன் மூலம் வெளிநாடுகளிலும், இந்தியாவின் வெளிமாநிலங்களிலும் வேலைக்காரன் அதிதி புதிரி ஹிட் அடித்துள்ளது.சிறிய அளவில் நஷ்டம்ஆனால் தமிழகத்தில் மட்டும் பார்க்கையில் அதிக தொகைக்கு வியாபாரம் நடந்ததால் சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.