மத்திய அரசு பள்ளியில் புளூவேல் கேம் ஆடிய 20 மாணவர்கள் -  திகைப்பில் ஆசிரியர்கள்...

First Published Sep 20, 2017, 3:25 PM IST
Highlights
The teachers rescued 20 students who played the Pewlewel Game at Kendra Vidhya School in Pelakkawa Karnataka.


கர்நாடக மாநிலம் பெலகாவியில்  கேந்திரா வித்லயா பள்ளியில் ’புளுவேல் கேம்’ விளையாடிய 20 மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டனர். 

செல்போன்களில் ’புளுவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது.  

இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாகவும், புளுவேல்’ விளையாட்டை பரப்பும் இணைய தளத்தை முடக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவர்கள் ’புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

பெலகாவி நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கையில் நீல திமிங்கலம் போல் ரத்தக் கீறல்கள் காணப்பட்டன. 

இதையடுத்து ஆசிரியர்கள் விசாரித்ததில் 14 மாணவர்கள் மற்றும் மாணவிகள்  என மொத்தம் 20 பேர் கைகளில் இது போன்ற கீறல்கள்  இருந்தது தெரியவந்தது. 

அவர்களை மீட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடத்தி புளுவேல் விளையாட்டின் ஆபத்து பற்றி எடுத்துக்கூறினார்கள்.  

இதையடுத்து புளூவேல் கேம் விளையாடக்கூடாது என கல்வி அதிகாரிகளுக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இது போன்ற சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. 
 

click me!