
விமானத்தில் பறக்கும் போது தனது கணவன் கள்ள தொடர்பை கண்டுபிடித்த மனைவி ரகளையில் ஈடுபட்டதால் அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஈரானை சேர்ந்த தம்பதி தங்களின் குழந்தைகளுடன், கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து, இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகருக்கு கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் சென்று கொண்டிருந்தனர்.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கணவர் தூங்கி விட்டார். அப்போது, கணவர் கைரேகையின் மூலம் அவரது மொபைல் போனை இயக்க வைத்த மனைவி தொலைபேசியை நோண்டியுள்ளார்.
இதில், கணவரின் கள்ள தொடர்பு விவகாரம் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து மனைவி கடும் ரகளையில் ஈடுபட்டார்.
விமான ஊழியர்கள் சமாதானப்படுத்தியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கும்படி விமானத்தின் பைலட் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி அந்த விமானம், சென்னையில் அவசரமாக தரையிறக்கி அந்த தம்பதியும் அவர்களின் குழந்தைகளும் கீழே இறக்கி விடப்பட்டனர்.