லாரி மீது ஜீப் மோதி விபத்து - ஒரு குழந்தை உட்பட 13 பேர் பலி...! 

 
Published : Nov 07, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
லாரி மீது ஜீப் மோதி விபத்து - ஒரு குழந்தை உட்பட 13 பேர் பலி...! 

சுருக்கம்

At least 12 people were killed in the jeep when the jeep crashed into a truck in Gujarat early this morning.

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லாரி மீது ஜீப் மோதிய பயங்கர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான அலிராஜ்பூர் மாவட்டத்திற்கு சுமார் 25 பேர் ஜீப்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதியது. 

இதில் ஜீப்பில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த விபத்து கேதா மாவட்டம் காத்லால் நகருக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!