நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 15ல் தொடக்கம்?

First Published Nov 22, 2017, 7:25 PM IST
Highlights
The parliamentary winter session begins on December 15 and reports that it will take place until January 5.


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 15ந்தேதி தொடங்கி, ஜனவரி 5ந்தேதி வரை நடக்க வாய்ப்பு இருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், குஜராத் மாநிலத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 4, 9 தேதிகளில் நடக்கின்றன. வாக்குகள் 14ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில், வழக்கமாக நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் கூட்டப்பட வேண்டும்.ஆனால், குஜராத் தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு குளிர்காலக்கூட்டத்தொடரை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது.

நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு தடை உள்ளிட்ட பலவிவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் போது அது குஜராத் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என மத்தியஅரசு கருதுகிறது. இதனால், கூட்டத்தொடரை நடத்தாமல் தாமதிக்கிறது என காங்கரிஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ குளிர்காலக் கூட்டத் தொடர் வழக்கமாக நடைபெறும் என்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது.  நாடாளுமன்றம் செயல்படுவதும், குஜராத் தேர்தல் தேதியும் ஒன்றாக சேர்ந்து வந்துவிடக்கூடாது என்பதை மட்டும் அரசு கருதுகிறது” என்று தெரிவித்தார். 

click me!