கொரோனாவால் குழந்தைகளை மாற்றிக் கொண்ட தாய்கள்... அட, இப்படியும் ஒரு சம்பவமா..?

Published : Jun 15, 2020, 05:34 PM IST
கொரோனாவால் குழந்தைகளை மாற்றிக் கொண்ட தாய்கள்... அட, இப்படியும் ஒரு சம்பவமா..?

சுருக்கம்

அது போல் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள இரண்டேகால் வயது குழந்தையை அந்த 6 வயது குழந்தையின் தாய் பார்த்துக் கொள்கிறார். 

சிக்கிம் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனால் அவரது இரண்டேகால் வயது குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு வீட்டில் 6 வயது குழந்தையை தவிர தாய் முதல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அந்த 6 வயது குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என அவளின் தாய் தவித்தார்.

இதற்கு என்ன செய்வது என யோசித்த மருத்துவர்கள், கொரோனா பாதிக்காத 6 வயது குழந்தையை இரண்டேகால் வயது குழந்தையின் தாய் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அது போல் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள இரண்டேகால் வயது குழந்தையை அந்த 6 வயது குழந்தையின் தாய் பார்த்துக் கொள்கிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியினரை நெகிழ வைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?