Motor vehicles Act:அலர்ட் மக்களே!! 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மட் கட்டாயம்..!அறிவித்தது மத்திய அரசு

Published : Feb 16, 2022, 05:05 PM ISTUpdated : Feb 16, 2022, 05:08 PM IST
Motor vehicles Act:அலர்ட் மக்களே!! 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மட் கட்டாயம்..!அறிவித்தது மத்திய அரசு

சுருக்கம்

இருசக்கர வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சாலை விதிகள் விரைவில் அமலுக்கு வர உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கும் மேல் இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு சாதனம் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சாதனம் 30 கிலோ எடை வரை தாங்கும் அளவில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு ஓட்டநர் உரிமம் ரத்து உள்ளிட்ட தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் வெளியாகிய ஒரு ஆண்டிற்கு பிறகு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. அதன்படி இந்த விதிகள் அனைத்தும் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!