எங்க போறீங்கன்னு கேட்டது குத்தமா..? ஹிஜாப் போட்டு வெளிநாட்டு பெண் செய்த ‘ரகளை’

Published : Feb 16, 2022, 07:36 AM IST
எங்க போறீங்கன்னு கேட்டது குத்தமா..? ஹிஜாப் போட்டு வெளிநாட்டு பெண் செய்த ‘ரகளை’

சுருக்கம்

தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில், ஹிஜாப் அணிந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாலையில் ரகளை செய்த காணொளி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு, தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

மாணவர்களின் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் கர்நாடகத்தில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப்-காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடை விதித்து இடைக்கால தீர்ப்பு அளித்தது. இதனால் 5 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

 ஹிஜாப் என்ற வார்த்தை இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில், ஹிஜாப் அணிந்த வெளிநாட்டுப் பெண் டாக்ஸி டிரைவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். பிறகு டாக்சியில் இருந்து இறங்கி ஓட தொடங்கியிருக்கிறார்.

சிறிது தூரத்தில் நின்றிருந்த போலீசார் அந்த பெண்ணை பிடிக்க முயன்றபோது,  போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, குருகிராம் போலீஸார் இந்தப் பெண்ணைக் காவலில் கைது செய்தனர். இதுகுறித்து கூறிய டாக்ஸி ட்ரைவர். ‘நீங்க எங்க போறீங்க’ என்று கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து என்னை தாக்கினார்’ என்று கூறினார்.

 

தற்போது அந்த வெளிநாட்டு பெண்ணை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணின் மனநிலை சரியில்லை என்றும், தற்போது இது தொடர்பாக போலீசார் முழு விசாரணை நடத்தி வருவதாகவும், அப்போதுதான் அந்த பெண்ணின் மனநிலை மோசமாக உள்ளதா அல்லது தாக்குதலுக்கு பின்னணியில் அந்த பெண் உள்ளாரா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!