பாரத் ஜோடோ யாத்திரையில் என்னுடைய டி-ஷர்ட் முக்கியமான அம்சம் கிடையாது, என் டி-ஷர்ட்டை கவனிக்கும் ஊடகங்கள், என்னுடன் கிழந்த ஆடை அணிந்து நடந்துவரும் விவசாயிகள், தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் என்னுடைய டி-ஷர்ட் முக்கியமான அம்சம் கிடையாது, என் டி-ஷர்ட்டை கவனிக்கும் ஊடகங்கள், என்னுடன் கிழந்த ஆடை அணிந்து நடந்துவரும் விவசாயிகள், தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 110 நாட்கள் முடிந்து, 3ஆயிரம் கி.மீ கடந்துள்ளது. 2ம்கட்ட நடைபயணம் உத்தரப்பிரதேசத்துக்குள் சென்றுள்ளது, இன்று மாலை உ.பி எல்லை வழியாக ஹரியானாவுக்குள் பாரத் ஜோடோ நடைபயணம் நுழைய இருக்கிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த விமானம் அவசரமாக கவுகாத்தியில் தரையிறக்கம்: என்ன காரணம்?
இதற்கிடையே, பாக்பத்-ஷாம்லி எல்லையில் உள்ள பாராவுத் பகுதியில் தெருவோர கூட்டத்தில் நேற்று ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் நாட்டில் பரவியுள்ள வெறுப்பு மற்றும் வன்முறையை நீக்குவதும், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து மக்களுக்கு தெரிவிப்பதும்தான்.
ஊடகங்கள் நான் அணிந்துள்ள டி-ஷர்ட் பற்றித்தான் அதிகமாகப் பேசுகின்றன. ஆனால், என்னுடைய நடைபயணத்தில் நடந்துவரும் கிழிந்த ஆடை அணிந்த ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளை புறக்கணித்துவிட்டார்கள்
என்னுடைய டி-ஷர்ட் உண்மையான கேள்வி அல்ல, இந்த தேசத்தில் உள்ள விவசாயிகள், ஏழைத்தொழிலாளர்கள், குழந்தைகள் ஏன் கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளார்கள், குளிருக்கு ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.
110 நாட்கள் நடந்திருக்கிருக்கிறேன், 3ஆயிரம் கி.மீ கடந்திருக்கிறேன் ஆனால், எனக்கு களைப்பாகவோ அல்லது குளிரவோ இல்லை. என்னுடைய யாத்திரையின் நோக்கம் தேசத்தில் பரவியிருக்கும் வெறுப்பு, வன்முறையை அகற்றுவதுதான். பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி மூலம் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அச்சமூட்டுவதுதான் பாஜகவின் கொள்கை. அச்சத்தைப் போக்கும் அரசியலை நாங்கள் செய்கிறோம், அச்சமும், வெறுப்பும்தேசத்துக்கு பலன் அளிக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்த யாத்திரைக்கு மற்ற இரு நோக்கங்கள் உள்ளன ஒன்று பணவீக்கம், வேலையின்மை நோக்கி மக்களைத் திருப்புவதாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரமதர் மோடி, அப்போது எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.400 என உயர்ந்தவுடன் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது என்றார்.ஆனால், இன்று சிலிண்டர் விலை ரூ.1100 என்று அதிகரித்துள்ளது. யாருடைய பாக்கெட்டுக்கு பணம் செல்கிறது, நரேந்திர மோடியின் சில நண்பர்களின் பாக்கெட்டுக்குத்தான் பணம் செல்கிறது
வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நான் சந்தித்த இளைஞர்கள் அனைவரும் பொறியாளர்கள், பட்டதாரிகள். ஆனால், அவர்கள் தொழிலாளர்ககளாக இருக்கிறார்கள், அல்லது பக்கோடா விற்கிறார்கள்.
விமானத்தில் மூதாட்டி முன் ஜிப்பை கழற்றி அசிங்கம் செய்த போதை ஆசாமி
ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்வது இளைஞர்களின் கனவா இருந்தது. ஆனால் அதையும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பிடுங்கிவிட்டது.
15 ஆண்டுகள்வரை ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அதன்பின் ஓய்வூதியம் பெறும் இளைஞர்களை அக்னி பாத் திட்டம் மூலம் பிரதமர் மோடி 4 ஆண்டுகள் பணியாற்றவைத்து வெளியேற்றிவிடட்டார் இதுதான் புதிய இந்தியா
ஊடகங்களை நான் நண்பர்கள் என்று அழைக்கிறேன். ஆனால், நண்பராக அவர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை. தங்கள் எஜமான்களுக்கு பயந்து உண்மையான பிரச்சினைகளை அவர்கள் எழுப்புவதில்லை.
ஊடகங்கள் உண்மையான பிரச்சினைகளை பிரதிபலிக்காதபோது, பணமதிப்பிழப்பு, தவறானஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை நாடாளமன்றத்தில் எழுப்புகிறோம். ஆனால், அங்கு மைக் ஸவிச்ஆப் செய்யப்படுகிறது. அதனால்தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களைச்சந்தித்து பேசுகிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்