மீண்டும் சிக்கலில் சிக்கிய ‘அமேசான்’ - தவறான இந்திய வரைபடத்தை வௌியிட்டு சர்ச்சை...

First Published May 9, 2017, 9:51 PM IST
Highlights
the issue of Amazons misinterpreted Indian map is a controversy


இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வௌியாடாமல், திருத்தப்படாத வரைபடத்தை விற்பனைக்கு அனுப்பி அமெரிக்க நிறுவனமான அமேசான் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது.

பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த  செய்தித்தொடர்பாளர் தஜேந்திர் பால் எஸ்.பாகா இதை இணையதளத்தில் பார்த்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுபோல்...

ஏற்கனவே இதேபோன்று தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் முன்பு கால்மிதியடியில் பதித்து கண்டனத்தை பெற்றது அமேசான். மேலும், மகாத்மா காந்தி, விநாயகர் ஆகியோரின் படங்களையும் பதித்து அரசின் கண்டனத்தை பெற்றது. அதன்பின் அமேசான் நிறுவனம் மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியது.

சர்ச்சை

கனடாவில் உள்ள அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இந்தியாவின் வரைபடத்தை விற்பனைக்கு வௌியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் இல்லாமல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான சர்ச்சைக்குரிய பகுதிகள் இந்தியாவில் சேர்க்கப்படாமல் இருக்கிறது.

கண்டனம்

இதைப் பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர்தஜேந்திர பால் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ அமேசான் நிறுவனம் இந்தியாவின் சிதைக்கப்பட்ட, தவறான வரைபடத்தை வெளியிட்டு விற்பனைக்கு வைத்துள்ளது. அந்த வரைபடத்தை உடனடியாக விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான சர்ச்சைக்குரிய பகுதிகள் இல்லை’’  எனத் தெரிவித்துள்ளார்.

7ஆண்டு சிறை

இதுபோன்ற இந்தியாவின் வரைபடங்களை விற்பனை செய்யும் முன், இந்திய அரசு, அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் இந்தியாவின் வரைபடத்தை விற்பனை செய்தல், பதிப்பு செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. ஒரு கோடி முதல் ரூ.100 கோடி வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!