மக்களே உஷார்.!! மே 6ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்திய வானிலை மையம் அலெர்ட் !

Published : May 01, 2022, 12:38 PM ISTUpdated : May 01, 2022, 12:39 PM IST
மக்களே உஷார்.!! மே 6ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்திய வானிலை மையம் அலெர்ட் !

சுருக்கம்

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த திசையை நோக்கி நகரும் என்ற தகவல் தற்போதுள்ள நிலையில் தெரிவிக்கப்படவில்லை. தாழ்வுநிலை உருவானால் மட்டுமே எப்படி நகரும் என்பதற்கான தகவல் தெரிவிக்கப்படும். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயல் எச்சரிக்கையாக மாறுமா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. வட இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் பாந்தாவில் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அங்கு வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : முஸ்லீம் கடையில் டீ குடிக்காதீங்க.. ஆண்மைக்குறைவு ஏற்படும் - சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ !!

இதையும் படிங்க : பாஜகவை ஜெயிக்க ஒரு வழிதான் இருக்கு..3வது அணிக்கு வாய்ப்பில்ல ராஜா.. பி.கே சொன்ன மாஸ்டர் பிளான் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tirumala Free Bus Service: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இலவசமாக பயணிக்கலாம்
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?