
மும்பையில் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த ஒருவருக்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக போலீசுக்கும் மக்களுக்கும் இடையே நட்புணர்வு இருக்க வேண்டும் என ஒவ்வொரு மீட்டிங்கிலும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதற்கேற்றார் போல் சில போலீசார் நடந்து கொள்வதில்லை. மக்களிடம் இருந்து எப்படி பணத்தை பிடுங்கலாம் என்பதிலேயே பெரும்பாலும் போலீசார் எண்ணுகின்றனர்.
இதனால் ஒரு புகார் கொடுக்க கூட காவல் நிலையம் செல்ல பொதுமக்கள் அச்சப்படக்கூடிய நிலை தற்போது அறங்கேறி வருகின்றது.
இந்நிலையில், மும்பையில் உள்ள சகிநாகா காவல் நிலையம் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான உறவுக்கு தகுந்த உதாரணமாகத் திகழ்கிறது.
அதாவது இந்த காவல் நிலையத்திற்கு தனியாக ட்விட்டர் பக்கம் ஒன்று உள்ளது. அதில் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். ட்விட்டர் மூலம் வரும் புகார்களுக்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவும் செய்கின்றனர்.
அந்த வகையில், நேற்று இந்த காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்துள்ளார். அனிஷ் என்பவர் அளித்த புகாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கவனித்த போலீசார் அவருக்க பிறந்தநாள் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.மேலும் அவரை கேக் வெட்ட வைத்து ஊட்டி விட்டிருக்கிறார்கள்.