இறந்த குழந்தையின் உடலோடு மழையில் 4 கி.மீ., நடந்த தந்தை..! அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு

Published : Jul 14, 2022, 09:14 AM IST
இறந்த குழந்தையின் உடலோடு மழையில் 4 கி.மீ., நடந்த தந்தை..! அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு

சுருக்கம்

 இறந்த நான்கு மாத குழந்தையின் உடலில் மழை நீர் நனையாதபடி 4 கி.மீ., துாரம் தந்தை காட்டுப்பகுதிக்குள் தூக்கிகொண்டு நடந்து வந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேயம் இல்லாத சமூகம்

 2 வயது  சிறுவன் உயிரிழந்ததையறியாமல் அவனது சகோதரன் சாலையோரத்தில் மடியில் படுக்கவைத்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறைவதற்க்குள் இதே போன்று சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். அவரது 4 மாத குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புழம்பியுள்ளனர். கொட்டும் மழையில் வீட்டிற்கு குழந்தையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் நின்றுள்ளார்.

கனமழை எதிரொலி… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை முதல் விடுமுறை… அறிவித்தார் தெலுங்கானா முதல்வர்!!

ரயில் வண்டிகளில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு..கட்டணத்தை உயர்த்த திட்டம்.. அலறி துடிக்கும் ராமதாஸ்

 

இறந்த குழந்தையை மழையில் தூக்கி சென்ற தந்தை

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரது குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது; இதனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தனது வீட்டிற்கு 4 கிலோ மீட்டர் தூரம் குழந்தையோடு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை கண்டு வருந்தினார். இதனையடுத்து மருத்துவமனையில் குழந்தையின் உடலை ஒப்படைத்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், தடிகூண்டு குடியிருப்பு பகுதி வரை குழந்தையை அய்யப்பன் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து குறுகிய மற்றும் மலைப்பகுதியாக இருப்பதால் அந்த பகுதிக்கு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 4 மாத குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி அய்யப்பன் நடக்க தொடங்கினார். கேரளாவில் தென் மேற்கு பருவமழை அதிகரித்துள்ளன் காரணமாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழைக்கு நடுவே அய்யப்பன் குழந்தையை கொண்டு சென்றதும், குழந்தையின் மேல் மழைத்துளி விழாமல் உடன் வந்தவர் குடைபிடித்தப்படி வரும் சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

வீட்டில் தனியாக இருந்த உரிமையாளரையே கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!