
ஜிஎஸ்டியின் கீழ் விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் மீட்பு தடுப்பு தேசிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி வரி கடந்த ஜூலை 1ந்தேதி அமலுக்கு வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு முன்பு இருந்ததைக்காட்டிலும் அதிகமாக வரி விதிக்கப்பட்டு இருந்தது கண்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் கூடி 200க்கும் மேற்பட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த வரியைக் குறைத்தது.
ஆனால் விற்பனையாளர்கள், குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி விலையை அமல்படுத்தாமல் பழைய விலையிலேயே பொருட்கள் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஜிஎஸ்டியின் கீழ் விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் மீட்பு தடுப்பு தேசிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பின் பயனை நுகர்வோர் முழுமையாக பெறுவதற்கு புதிய அமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.