
குஜராத் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99, காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் மற்ற வேடர்பாளர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் கட்ட வாக்குப்பதிவில் இந்த முறை 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.7சதவீதம் குறைவு.
இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவில், 14 மாவட்டங்களில் 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாயின. இது 2012ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் குறைவாகும். கடைசிக் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 14ஆம் தேதியன்று நிறைவு பெற்றது.
இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது. இதில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தது.
இந்த தேர்தலை பொறுத்தவரை பாஜகவுக்கு மிகுந்த நெருக்கடியை காங்கிரஸ் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
நீண்ட நேர இழுக்கடிப்புக்கு பிறகு பாஜக முன்னிலையை நிலை நாட்டியது. இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99, காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் மற்ற வேடர்பாளர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.