One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜனவரி 15 வரை காலக்கெடு.. பொதுமக்கள் ஆலோசனை சொல்லலாம்.!!

By Raghupati RFirst Published Jan 5, 2024, 10:56 AM IST
Highlights

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

Latest Videos

நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது.  அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜன. 15-க்குள் தெரிவிக்கலாம். ஜன. 15-க்குள் ஒரே தேர்தல் தொடர்பாக மக்கள் கருத்து கூறலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம். பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hic@ gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டாவேர்ஸில் முதல் கற்பழிப்பு.. கேம் விளையாடிய போது ஏற்பட்ட விபரீதம்.. அச்சுறுத்துகிறதா டெக்னலாஜி?

click me!