ஓலா ஸ்கூட்டரை கழுதையை கட்டி இழுத்து சென்ற வாடிக்கையாளர்...!அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்

By Ajmal KhanFirst Published Apr 26, 2022, 9:30 AM IST
Highlights

ஓலா ஸ்கூட்டர் வாங்கிய சில நாட்களிலேயே பழுது ஏற்பட்ட நிலையில் இதற்கு உரிய வகையில் தீர்வு கிடைக்காததால் ஸ்கூட்டரை கழுதையை கட்டி இழுத்து சென்ற விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

பழுதான ஓலா ஸ்கூட்டர்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மின்சார ஸ்கூட்டரை நாடி செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீப்பிடத்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது ஒரு பக்கம் என்றால் வாங்கிய சில நாட்களிலேயே புதிய மின்சார ஸ்கூட்டர் பழுது ஏற்பட்டு சரிசெய்யாமல் திணறும் நிலையும் தொடர்ந்து வருகிறது.  மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த  சச்சின் கிட்டே, புதிதாக ஸ்கூட்டர் வாங்கிய  சில நாட்களில்  பழுது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக  ஓலா நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், நூதன வகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்கூட்டரை இழுத்து சென்ற கழுதை 

ஓலா மின்சார ஸ்கூட்டரில் கழுதையை  கட்டி இழுத்து சென்றுள்ளார். அப்போது ஓலா நிறுவனத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள், ஓலா நிறுவனத்தில் வாகனங்களை வாங்காதீர்கள் என்ற பதாகையுடன் அந்த நகரையே சுற்றி சுற்றி வந்துள்ளார். இது தொடர்பாக சச்சின் கிட்டே கூறுகிறையில், ஓலா நிறுவனத்தில் இருந்து வாங்கிய 6 நாட்களில் ஸ்கூட்டர் வேலை செய்யவில்லையென்றும், இதனையடுத்து ஓலா நிறுவன மெக்கானிக் ஸ்கூட்டரை சோதனை செய்தார். ஆனால் செரிசெய்யவில்லையென தெரிவித்தார். இது தொடர்பாக பல முறை ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு பலமுறை அழைப்புகள் செய்தும் எந்தவித திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லையென கூறினார்.  எனவே ஓலா நிறுவனத்தில் நுகர்வோருக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென்று குற்றம்சாட்டியவர், இது தொடர்பாக அரசாங்கம் ஓலா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


 

click me!