கார்த்தி சிதம்பரம் வெளிநாடு பறக்கலாம்...! ஆனால் ஒரு நிபந்தனை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

 
Published : Feb 16, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு பறக்கலாம்...! ஆனால் ஒரு நிபந்தனை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

சுருக்கம்

The Chennai High Court has ordered the permission of Karthi Chidambaram to go abroad.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

கார்த்தி சிதம்பரம், வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது.  

இதனை தொடர்ந்து இதை ரத்து செய்யக்கோரி, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதுனையடுத்து வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி அளிக்கும்படி கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அனுமதி வழங்கியது. 

மேலும், வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரம் தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!