
கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வங்கிக்கணக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பதாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமையிலான மோடி அரசு அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தி வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்டி என பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் அத்தனை திட்டங்களும் கீழ்தட்டு மக்களை நெருக்கவதாக உள்ளது என கூறி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுதான் வருகிறது.
இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வங்கிக்கணக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பதாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதில் பெண்கள் எண்ணிக்கை, சுயமாக சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்கள், பெண்களின் பொருளாதார ரீதியான பங்களிப்பு உள்ளிட்டவைகள் அடங்கிய 21 காரணிகளை அடிப்படையாக வைத்து வருமைக்கோடு குறித்து மதிப்பிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான மதிப்பீட்டு பணிகளை மிஷன் அன்த்யோத்யா என்ற பெயரில் விரைவில் தொடங்கவும் மத்திய அரசு முடுவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிஷன் அன்த்யோத்யா மூலமாக 50,000 வறுமை இல்லாத பஞ்சாயத்துகளை உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.