Nitish Kumar: நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை: பாஜக விளாசல்; மாநிலம் முழுவதும் இன்று போராட்டம்

By Pothy Raj  |  First Published Aug 10, 2022, 10:54 AM IST

நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து, பீகார் மாநிலத்தை ஊழலுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் தள்ளிவிட்டார் என்று பாஜக விளாசியுள்ளது.


நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து, பீகார் மாநிலத்தை ஊழலுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் தள்ளிவிட்டார் என்று பாஜக விளாசியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தேர்தலைச்சந்தித்து வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக, நிதிஷ் குமார் கூட்டணி  2 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது

Tap to resize

Latest Videos

மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்... துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பு!!

. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஆர்பிசி சிங் மூலம் கட்சியை உடைத்து, எம்எல்ஏக்களை இழுத்து, தனித்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து, நேற்று ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை வழங்கினார். இதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளார்.

நிதிஷ் குமாரின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் இன்று நிதிஷ் குமாரைக் கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

  நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்

பாஜகவின் மூத்த தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி கூறுகையில் “ நிதிஷ் குமார் கூறுவது அனைத்தும் பச்சைப் பொய். ஆர்சிபி சிங்கை வைத்து பாஜக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை ஒருபோதும் உடைக்க விரும்பவில்லை, நினைக்கவில்லை. நிதஷ் குமார் அனுமதியில்லாமல், உத்தரவு இல்லாமல் ஆர்சிபி சிங்கிற்கு அமைச்சர் பதவி கொடுத்தோம் என்பதும் பச்சைப் பொய். பாஜகவுடன் உறவை முறிக்க நிதிஷ் குமாருக்கு ஏதாவது காரணம் தேவை. அதான் ஏதோ கூறுகிறார். 2024ம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடனஅ ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் “நிதிஷ் குமார் நம்பகத்தன்மை அற்றவர்.  சோசலிசம் பற்றி நிதிஷ்குமார் பேசுவார், ஆனால், 1990களில் அயோத்தி இயக்கம் தீவிரமாக இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ் குமார்.மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் எங்களுடன் சேர்ந்து லாலுபிரசாத் யாதவுக்கு எதிராக நிதிஷ் குமார் செயல்பட்டார். கடந்த 2013ல் தனிப்பட்ட வெறுப்பால் பிரதமர் மோடியைவிட்டு நிதிஷ் விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்தார்.

பிரதமர் மோடி-யின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரிப்பு: நிலத்தை தானமாக வழங்கிவிட்டார்

தேஜஸ்வி யாதவ் கடந்த 2017ம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கியவுடன் மீண்டும் பாஜகபக்கம் நிதிஷ் வந்தார். இப்போது மீண்டும் ஆர்ஜேடி பக்கம் சென்று பீகார் மாநிலத்தை சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் பாதைக்கு கொண்டு செல்ல நிதிஷ் திட்டமிட்டுள்ளார்”எனத் தெரிவித்தார்

பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில் “ நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை, அது பழகிப்போய்விட்டது. 2019, 2020களில் மக்கள் யாரைத் தண்டித்தார்கள்” என சாடினார்

click me!