இரண்டே மாதத்திற்குள் மீண்டும் கொரோனா பாதிப்பில் சிக்கிய பிரியங்கா காந்தி...! காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி

By Ajmal Khan  |  First Published Aug 10, 2022, 9:50 AM IST

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடந்த ஜூன் 3 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பிரியங்கா காந்திக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும் குறைந்து கொண்டும் வருகிறது. இந்தியாவில் நேற்று  28 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு கான கோரி  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே  கறுப்பு உடை அணித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கோஷம் எழுப்பினார். பின்னர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் இன்று 941 பேருக்க்உ தொற்று உறுதி!!

இரண்டாவது முறையாக கொரோனா

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தனது பணிகளை கவனித்து வருவதாக டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம்  2 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த தினமே அதாவது ஜூன் 3 ஆம் தேதி பிரியங்கா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் இரண்டாவது முறையாக பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

click me!