
மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகை சின்மயி கண் முன்பாக, கார் டிரைவர் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமீத் ராகவன் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவரின் மனைவி சின்மயி சுர்வே. மராத்தி திரையுலகில் இவர் மிகவும் பிரபலமானவர். சின்மயி மராத்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.
மும்பையின் விலே பார்லே பகுதயில் பார்லே திலக் வித்யாலயா பள்ளி அருகே வெள்ளைநிற பி.எம்.டபுள்யூ கார் நின்றிருந்தது. அப்போது காரை திறந்து வெளியே வந்த கார் டிரைவர், நடிகை சின்மயி முன்பு வந்தார். சின்மயி முன் வந்த கார் டிரைவர், சுய இன்பம் அனுபவித்துள்ளார்.
தமக்கு முன்னாள் இப்படி ஒரு கேவலமான ஒரு காரியத்தை பார்த்த நடிகை சின்மயி அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அறைய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அந்த நபர் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். அப்போது கார் எண்ணை சின்மயி குறித்து வைத்துக் கொண்டார்.
பின்னர், வீட்டுக்குச் சென்ற நடிகை சின்மயி, இது குறித்து கணவரிடம் கூறியுள்ளார். உடனே ராகவன், விலே பார்லே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், காரின் எண்ணையும் போலீசாரிடம் ராகவன் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டே மணி நேரத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கார் டிரைவரின் பெயர் சௌத்ரி (42) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் சௌத்ரியுடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் ஓடும பேருந்தில் கல்லூரி மாணவி முன்பு, சுய இன்பம் அனுபவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், நடிகை சின்மயி முன்பு இந்த கொடுமை நடந்துள்ளது.