திருமண நாளை கொண்டாடிய மனைவி இரவில் தற்கொலை! அதிரவைக்கு மர்ம மரணம்...

 
Published : Feb 20, 2018, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
திருமண நாளை கொண்டாடிய மனைவி இரவில் தற்கொலை! அதிரவைக்கு மர்ம மரணம்...

சுருக்கம்

Hours after celebrating wedding anniversary Hyd woman found dead in apartment

திருமண நாள் கொண்டாடிய அதே நாளில் இளம் பெண் ஒருவர் அப்பாட்மெண்டின் 4வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பத்தை அடுத்து, நாகலட்சுமியின் கணவர் எம். ரமேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மர்மமான முறையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால் தற்போது விசாரணை வட்டத்தில் அவரும் இருக்கிறார்.

இதுகுறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அதிகாலையில், அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஹைதராபாத்தில் இருக்கும் மல்காஜ் கிரி என்ற பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவரும் தங்களது 8வது திருமண தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். நிறைய சொந்தங்களை அழைத்து சந்தோஷமாகவே கொண்டாடி உள்ளார்கள். ஆனால், இரவான பின்பும் நாகலட்சுமி மட்டும் தூங்காமல் போனில் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை காலை நான்கு மணிக்கு ரமேஷ் எழுந்து பார்க்கும் போது நாகலட்சுமி காணாமல் போய் இருக்கிறார். வீட்டு கதவும் வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு நம்பருக்கு போனில் அழைத்து கதவை திறக்க வைத்துள்ளார். பின்னர் வெளியே தேடி சென்ற போதுதான், நாகலட்சுமி தரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாகலட்சுமி நேரடியாக 4வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இது கொலையா, தற்கொலையா என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. இதில் கொடுமை என்னன்னா? கொலை செய்யும் அளவிற்க்கு இவர்களுக்கு எதிரிகள் யாரும் இல்லையாம் அதேபோல, தற்கொலை செய்யும் அளவிற்கும் நாகலட்சுமிக்கு ஒரு சின்ன பிரச்சனை கூட இல்லை என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!