ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம்? : ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை!

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம்? : ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை!

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Bandipora பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் 29-ம்​தேதி பாகிஸ்தானின் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் Surgical Strike என்ற பெயரில் நடத்திய துல்லிய தாக்‍குதலில் ஏராளமான தீவிரவாதிகளும், சில பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. Bandipora பகுதிக்‍குட்பட்ட Hajin கிராமத்தில் இன்று தீவிரவாதிகளின் நடமாட்டம் காணப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்‍குதலைத் தொடர்ந்து எல்லைக்‍கட்டுப்பாடுக்‍ கோடு மற்றும் சர்வதேச எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுவரை 286 முறை துப்பாக்‍கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்‍குதல் நடத்தியுள்ளனர். இதில், பாதுகாப்புப் படையினர் 14 பேர் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்‍கது.

PREV
click me!

Recommended Stories

Women Reservation Bill: 'இது அவங்க உரிமை, நாம போடுற பிச்சை இல்ல' - பிரதமர் மோடி தடாலடி!
சிலிண்டர் விலையை விடுங்க.. சப்ளைக்கே ஆபத்தா..? இன்னும் 4 வருஷத்துக்கு இது தான் கண்டிஷன்..