மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை முக்கிய தீர்ப்பு…

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை முக்கிய தீர்ப்பு…

சுருக்கம்

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு விற்க செய்ததாக  புகார் எழுந்தது.

இதற்கு பிரதியுபகாரமாக  மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டைரக்ட்  பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு 742  கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இவ்விரு வழக்குகளும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாறன் சகோதரர்களுக்கு  ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறைக்கு செல்வார்களா?

 

PREV
click me!

Recommended Stories

Women Reservation Bill: 'இது அவங்க உரிமை, நாம போடுற பிச்சை இல்ல' - பிரதமர் மோடி தடாலடி!
சிலிண்டர் விலையை விடுங்க.. சப்ளைக்கே ஆபத்தா..? இன்னும் 4 வருஷத்துக்கு இது தான் கண்டிஷன்..